e-mozi

எதிரொலி

தமிழ் இணையம் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தின் சின்ன மாடல் கிராமம் என்று சொல்லிவிட்டு பாசுர மடல்களுக்கு இணையத்தில் எழுந்த எதிரொலிகளைச் சொல்ல வில்லையென்றால் சரியாகாது. எனது கருத்துக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டனவென இப்புத்தகத்தை வாசிக்கும் வாசகர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக இணையத்தில் வெளியான கடிதங்களை இங்கு அப்படியே தருகிறேன். பத்திரிக்கையில் கட்டுரை வெளிவரும் போது கண்டனமோ, பாராட்டோ வர ஒரு வாரமோ, மாதமோ ஆகலாம். இணையத்தில் அப்படியல்ல. கட்டுரை வெளியான நொடிகளில் விமர்சனங்கள் வந்து நிற்கும். விஷய ஞான மில்லாமல் அறிஞர்கள் சபையான இணையத்தில் தொடர்ந்து எழுத முடியாது. அது இக்கடிதங்களை வாசித்துப் பார்த்தால் புரியும். இப்புத்தகத்தை வாசித்து விட்டு பதில் எழுத முடியவில்லையே என ஆதங்கப் படும் உள்ளங்கள் இருந்தால் - தங்கள் கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன என அறிந்து ஆறுதல் கொள்ளலாம்.

கடிதங்களை வாசித்துப் பாருங்கள்.

இதில் பல சுவையான விஷயங்கள் காணக்கிடைக்கும்.

3 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Thursday, December 21, 2006

ஆகா
பாசுர மடல் ஒருங்குறிக்கு வந்து விட்டதா!
அருமையிலும் அருமை கண்ணன் சார்!

இனி ஆழ்வார்க்கடியான் திருமொழியில் பாசுர மழை என்று சொல்லுங்கள்! மீ்ண்டும் வருகிறேன்!

  நா.கண்ணன்

Thursday, December 21, 2006

கண்ணபிரான்:

முதல் வருகை. இனிமையான வருகை. ஒரு பாகவதன் கால் முதலில் படுவதே இவ்விடத்திற்கு சிறப்பு.

ஆழ்வார்க்கடியானில் எனது ஆன்மீகக் கட்டுரைகளை முறையாகத் தொகுக்கத் திட்டம். எனவே பாசுர மடல்களை இட ஆரம்பித்துள்ளேன். 108 லிருந்து ஆரம்பித்தால், பின்னால் 1-108 வரை முறையாக அட்டவணைப் படுத்த முடியும். அப்போது இந்த அட்டவணை முதலில் வந்துவிடும் :-)

  குமரன் (Kumaran)

Saturday, December 23, 2006

ஆகா. இனி பாசுர மடல்களை இங்கேயே படித்து விடலாம். அருமை. அருமை. அடியோங்கள் செய்த தவப்பயன்.