e-mozi

மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை

இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்

தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை (ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல் அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர். இந்திய மதம் என்றொன்று "இந்து மதமாக" ஸ்தாபனப் படமுடியாமல் இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த, சுதந்திர மனப்பான்மைதான்.

எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள் இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான், இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை). எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution). இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகு முறைதான் காரணம் என அறியலாம்.

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குக!

7 பின்னூட்டங்கள்:

  nAradA

Thursday, June 12, 2008

In the pAsuram "paccai mAmalaipOl mEni" the last line should read "accuvai peRinum vENDEn arangamAnagaruLAnE". In your write-up it reads as "accuvai tarinum.." If you follow the flow of the poetry "peRinum" fits better than "tarinum" because the former word refers to "receiving" while the latter means "giving". Any comments?

  நா.கண்ணன்

Thursday, June 12, 2008

கொஞ்சம் பொறுங்கள். இக்கட்டுரை எழுதிய காலத்தில் எந்தப் புத்தகத்தை, எந்தப் படியைக் கையாண்டேன் என்று தெரியவில்லை. மதுரைத் திட்டம் வழங்கும் படியில் "பெறினும்" என்றே கையாளப்படுகிறது.

பெரினும் எனும் போது மோட்ச பதியான நாரணன் அருளினால் அல்லாமல் நமக்கு 'இந்திர லோகம் ஆளும்' பதவி கிடைக்கப் போவதில்லை என்று பொருள் வருகிறது. அவன் தருகின்றான், நான் பெருகின்றேன் எனும் பொருளில். ஆனால் "தறினும்" எனும் போது படர்க்கையில் அமைகிறது. பொருளில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. இலக்கணக் குற்றம் உள்ளதா? என்று சொல்லுங்களேன்!

  nAradA

Thursday, June 12, 2008

Mr. Kannan:
We all know that the more we seem to know the more we seem ignorant. I was not aware that there is another version which includes the word "tarinum". My interpretation of the pAsuram is that toNDaraDippoDiyAzhwAr was so enthralled at the site of the recumbent Lord in Srirangam that he would not trade it for even the CEO post of indralOkam. In that respect I interpret "peRinum" (tanmai in grammar) as being the recipient. However, as you point out it could also be taken as "even if the Lord gives--tarinum--the CEO post of indralOkam". Then I think the word "tarinum" takes on a second person (munnilai) since the last two words are addressed to the Lord (arangamA nagaruLAnE).. If you have some other explanation I welcome it.

  nAradA

Thursday, June 12, 2008

Just an addendum to the previous post. Another reason I think "peRinum" fits better is because of the words "yAn pOy.." . That denotes "when I go and occupy the chair of the head of indralOkam" which involves "peRinum" i.e., if I receive it . Hence I favor "peRinum".

  நா.கண்ணன்

Thursday, June 12, 2008

பூர்வர்களின் வியாக்கியானப்படி 'இந்திர லோகம்' என்பது வைகுந்தமே. 'இந்திர பதவியை' யாகம், தானம் போன்ற செய்கைகளால் அடைந்துவிடலாம். ஆனால் வைகுந்தப் பிராப்தி என்பது நாரணன் திருவுள்ளம் பற்றினால் அன்றிக் கிடைக்காது. எனவே, அப்பதவியை அவன் தரினும், நான் பெறினும் வேண்டேன் என்கிறார் ஆழ்வார். ஏனப்படி?

வியாக்கியானம் இன்னும் அழகாய் போகிறது.

முன் பாசுரத்தில் (வேத நூற் பிராயம்) "ஆதலால் பிறவி வேண்டேன்" என்றார் ஆழ்வார்.

பெருமாள், 'சரி, உமக்கு வைகுந்தப் பிராப்தி தருகிறேன்!' என்றார்.

ஆழ்வார் அதையும் வேண்டேன் என்கிறார்.

பெருமாளுக்கு தர்ம சங்கடம். என்னிடம் இந்த இரண்டுதானே உள்ளது. ஒன்று ஜீவனாகி லீலா விபூதியில் இரும்! இல்லையெனில் எம்முடன் வாசம் செய்யும் வைகுந்தம் எனும் நித்ய விபூதியில் இரும். இரண்டுக்கும் மாட்டேன் என்றால் நான் என்ன செய்வது என்கிறார்.

ஆழ்வார் பெருமாளிடம், இல்லையே, உம்மிடம் இன்னொரு விபூதி உள்ளதே! என்கிறார்.

அதற்குப் பெருமாள், 'அது என்ன? எனக்கே தெரியாத விபூதி?' என வினவ.

ஆழ்வார் திருவரங்கத்தைச் சுட்டி, இப்படியொரு பூலோக வைகுந்தம் வைத்திருக்கிறீரே! அங்கு வாசம் செய்யும் வாழ்வை எமக்கு அருள்க! என்கிறாராம்.

அவ்வளவு சிறப்பு திருவரங்கத்திற்கு.

  nAradA

Friday, June 13, 2008

Thank you, nA kaNNan, for the additional vyAkkiyAnam! Yes, the AzhwAr says in pAsuram 874 that he does not want a rebirth (AdalAl piRavi vENDEn) citing the subtracting effects of youth, sleep, hunger, disease etc from the allotted span (even 100 years)of life . For us ordinary mortals his reasoning to reject even vaikunTha prApti is very difficult to understand. His usage of the term "iccuvai tavira" referring to bhUloKa vaikunTham is sublime. No wonder he deserves to be an AzhwAr, true to the meaning of the word.

By the way I always thought "ALum" means "to rule". Your interpretation gives an additional meaning as "enter" vaikunTham too. Am I wrong in assuming "indiralOkam" denotes the "kingdom" of the celestials? Is there a subtle difference between "indralOkam" and "indiralOkam"?

  நா.கண்ணன்

Friday, June 13, 2008

"இச்சுவை". இந்திரலோகத்தில் ஒரு சுவையும் இல்லை. என்ன? ஊர்வசியும், மேனகையும் ஆடிக்கொண்டு இருப்பார்கள், இமைக்காமல் அவர்களையும், பிற தேவர்களையும் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். தேவலோகத்திலும் ஜாதி உண்டாம். யாகம், யக்ஞம் என்று செய்து அங்கு போவோர் 'கர்ம தேவர்' என்று கருத்தப்படுவர். இவர்கள் டூரிஸ்ட்டு விசாவில் வருபவர்கள். புண்ணியம் முடிந்தவுடன் திரும்ப வேண்டும்.

ஆனால், வைகுந்தம் அப்படி இல்லை. விநாடிக்கு, விநாடி புதுச்சுவையுடன் நாரணன் காட்சியளிக்க, "அந்தமில் பேரின்பம்" அது. ஆனால் ஆழ்வார் அதையும் வேண்டேன் என்கிறார்!

அப்படியெனில், அரங்க வாழ்வில் வேறு சுவை இருக்க வேண்டும். அது என்ன? பரம், விபவம்,வியூகம், அர்ச்சம் எனும் நிலைகளில் மிகவும் நீர்மை கொண்டது அர்ச்சம் எனும் கடைசி நிலை. நம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல் "வந்து நிற்க" எனும் படி அவன் ரட்சிக்கக் காத்து நிற்கிறான். மேலும் பூலோக வைகுந்தத்தில் வணங்கத்தக்க ஆச்சார்ய சீலர்கள் இருக்கிறார்கள், பாகவதப் பெருமக்கள் இருக்கிறார்கள். இத்தனை சுவை 'வைகுந்தத்தில்' கிடையாது.

எனவே 'இச்சுவை' அறிந்தோர் 'அச்சுவை' வேண்டோர் என்பது தாத்பர்யம்.

"ஆளும்" என்பது ஆட்சி செய்தல்தான். வைகுந்தம் போனால் நாம் எங்கே ஆள்கின்றோம்? ஆகா! வைகுந்தம் போனவுடன் நாராணன் நம்மை அள்ளி எடுத்து மடியில் வைத்து, 'நீ யார்?' என்பானாம். அசட்டுத்தனமாக 'நான் கண்ணன்!' என்று பூலோகப் பெயர் சொல்லல் கூடாது. ஆனால் உண்மையரிந்து "நானே நீ" என்று சொல்ல வேண்டும். "தன்னை என்றும் அடியார்க்கு முழுமையாய் தத்துவிடும் இயல்பினான நாரணன், நம்மை அவனாக மாற்றிவிடுவான். பின் நாம்தான் அங்கு ஆள்வோம், என்பது கருத்து.