e-mozi

மடல் 001- ஆழ்வார்களின் அறிமுகம்

வைணவ சாற்றுமுறை:

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.


தினம், தினம்: அடியார்களாகிய நாம், நம்மைக் காக்கும் அரங்கம், சடகோபன் (நம்மாழ்வார்) தந்த ஈரப் பாசுரங்கள் (கண்ணீர் பெருகி பக்தியால் அழுவதால் வரும் ஈரம்), கடல் சூழ்ந்த மண்ணுலகம், இப் பக்தியை மெய்யாக்கிக் காட்டும் ஆச்சார்யன் (இங்கு மணவாள மாமுனி) இவர்கள் வாழ்க வென்று இரைஞ்சும் பண்பாடுதான் நம் தமிழ் பண்பாடு. இது குறித்து நாம் பெருமை கொள்வோமாக!!
--------------------------------------------------------------------------------

ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.

சென்னைக்கும், மாமல்லைக்கும் இடையே ஒரு குக்கிராமம். அடாது மழை பெய்து கொண்டிருக்கும் ஒர் நாள். மழைக்கு ஒதுங்கி ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார். வீட்டில் யாரும் இல்லை. ரேழி என்று அழைக்கப்படும் இடைப் பகுதியில் ஒண்டுகிறார். அசதியில் கொஞ்சம் படுத்து இளைப்பாறுகிறார். அப்போது இன்னொரு நபர் நுழைகிறார். ஒதுங்க இடம் இருக்குமா என வினவுகிறார். அதற்கு முதல்வர் சொல்லுகிறார், ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். நான் இருந்து கொள்கிறேன் (அதாவது உட்கார்ந்து கொள்கிறேன்) வாரும் என்கிறார். இருவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் நுழைகிறார். கதவைத்தட்டி இருக்க இடம் கிடைக்குமா என வினவுகிறார். அன்புள்ளம் கொண்ட இந்த இருவரும், ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், எனவே வாருங்கள்-மூவரும் நிற்கலாம் என அவரை உள்ளே அழைக்கின்றனர். மூவருக்கும் நிற்கத்தான் சரியாக இடம் இருக்கிறது. அப்போது இவர்கள் அறியாமல் இன்னொருவர் இடையில் புகுந்தது போல் நெருக்குவதை மூவரும் உணருகின்றனர். யார் இந்த நான்காவது ஆள் என்ற கேள்வி எழுகிறது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளை தொட்டு உணரமுடியவில்லை. அப்போது முதலில் வந்தவர் அந்தாதி தொடங்குகிறார் இப்படி.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று.


(முதல் திருவந்தாதி-பொய்கை ஆழ்வார்)
இப்படி பாடிய முதல் பாசுரங்கள் நூறு. அடுத்தவர் தொடர்கிறார்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்


(இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)இப்படி இவர் நு¡று பாடல்கள் பாடுகிறார். இந்த அனுபவத்தில் இவர்களுக்கு புரிந்துவிடுகிறது
நான்காவதாக நிற்பது யார் என்று. அதை மூன்றாவதாக வந்தவர் விளங்கச் சொல்கிறார் இப்படி:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.


(முன்றாவது திருவந்தாதி-பேயாழ்வார்)


இவர் பாடியது நூறு பாடல்கள். பொய்கையில் தோன்றியதாக நம்பப்படுபவர் பொய்கை ஆழ்வார். பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே உணவாகக் கொள்வதால் இவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும். மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது) மூன்றாவது ஆள்வார் பேயாழ்வார். இதுவும் காரணப் பெயர். ஒரு காரியத்தில் பேயாய் அலைகின்றவர்களை நாம் கண்டதில்லையா? இவர் வேலை கண்ணன், நாரணன் என்று மெய்பொருள் கண்டு கொள்ள பேயாய் அலைவது. அதனால் அப்பெயர்.

Date: Tue, 02 Sep 1997 09:20:05 +0000

17 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Sunday, February 17, 2008

நகரமயமாக்கத்தில் "ரேழி" இன்னும் கொஞ்ச நாளில் காணாமற்போய்விடும் சாத்தியம் இருக்கு.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, February 17, 2008

//திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்//

பொன்மேனி கண்டேனா?
பொன்னார் மேனியனே சிவபிரான் ஆச்சே? திருக்கண்டேன்-ன்னு சொன்னவரு, அடுத்து எப்படிப் பொன்மேனியைக் காண்பாரு?

இன்னிக்கி மாட்டினாருப்பா கண்ணன் சார்! :-)
மாதவிப் பந்தல் ஒழுங்காப் படிச்சிருந்தாருன்னா இதுக்குப் பதில் சொல்லிடுவாரு! பார்க்காலாம்! :-)
http://madhavipanthal.blogspot.com/2007/11/2.html

  குமரன் (Kumaran)

Monday, February 18, 2008

பாசுர மடல் முழுவதும் இந்தப் பதிவில் ஏற்றி முடித்துவிட்டீர்கள் போல கண்ணன் ஐயா. இதற்குத் தான் காத்திருந்தேன். இனி மடல் - 1 தொடங்கி ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். :-)

  N.Kannan

Monday, February 18, 2008

இதிலொரு அழகு பார்த்தீர்களா! இந்த பிரம்ம விசாரத்தில் என்னை நிழலாகத் தொடரும் வடுவூர் குமார், குமரன், கண்ணபிரான் மூவரும் பின்னூட்டம் தந்துள்ளீர்கள். வரும் காலத்தில் பார்க்கும் போது முதல் மடல் தொடர்ந்து கடைசிவரை வருவது போலிருக்கும்.

நாலு பேரும் ஒரே ரேழியில், ஐந்தாவது ஆள் முட்டுவது தெரிகிறதா?

குமரன், இன்னுமொரு கட்டுரை உண்டு. அது மடலாக எழுதியது அன்று. மதுரைத் திட்டத்திற்கு எழுதியது. ஆனால், பெரியது. அதையும் வகைப்படுத்தி போட்டு, அட்டவணையும் தந்து விடுகிறேன். அப்போது கண்ணன் கழலினைப் பற்ற எளிதாக இருக்கும் :-)

  குமரன் (Kumaran)

Monday, February 18, 2008

கண்ணன் ஐயா. பொய்கையார், பூதத்தார், பேயார் பெயர் விளக்கம் நன்றாக இருக்கிறது.

இங்கே பொன்மேனி என்பது திருவின் மேனி என்றொரு வியாக்கியானம் படித்திருக்கிறேன். தங்கள் கருத்து என்னவோ?

மதுரைத் திட்டத்திற்காக எழுதியது இதுவா பாருங்கள். http://www.tamilnation.org/sathyam/east/pirapantam/introduction.htm

இது தானென்றால் இதனை முன்பே படித்திருக்கிறேன்.

http://koodal1.blogspot.com/2008/02/blog-post_15.html

  N.Kannan

Monday, February 18, 2008

குமரன்:

தமிழ் நேசன் பக்கத்தில் உள்ள கட்டுரைதான் அது.

திருமாலைக் கருப்பன் என்று அழைப்பது ஒரு சம்பிரதாயம். ஆனால் அவனை, "மணிவண்ணா" என்று ஆயிரம் முறை அழைக்கிறார் பெரியாழ்வார். திருநெடுந்தாண்டகத்தில், "மின்னுருவாய், பொன்னுருவாய்" என்று விளிக்கிறார் கலியன். அருட்பெருஞ்சோதி என்றே அழைக்கிறாள் ஆண்டாள். ஆக, நம்மாளைச் சும்மா கருப்பணசாமின்னு கேலி பண்ணிட முடியாது :-)

கண்ணபிரான் கொடுத்த இணைப்பில் பதில் இல்லையே. அடுத்த கட்டுரையில் தருவதாக ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. உங்கள் இணைப்பில் கூட விளக்கம் கிடைக்கவில்லை.

எல்லாத் தாயாரும் டாலடிக்கும் மின்னற்கொடிகளே, ராதையையும் சேர்த்து. அதனால்தானோ என்னவோ நம் சினிமாவில் ஹீரோ கருப்பா இருப்பார், கதாநாயகி எப்போதும் சிவப்பாக இருப்பார். சினிமாவிற்கும் முன்னோடி நம்மாளுதான்!!

  N.Kannan

Thursday, February 21, 2008

குமரன்: இப்போது எல்லாம் வலையேறிவிட்டன. கடைசியாக அந்நாளைய எதிரொலியையும் இணைத்துள்ளேன். அது அக்கால ஓட்டத்தின் நாடி.

  குமரன் (Kumaran)

Thursday, February 21, 2008

ஐயா.

இரவிசங்கர் நேற்று தொலைபேசிய போது எதிரொலியைப் பற்றியும் சொன்னார். உடனே வந்து பார்த்து பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் படித்துவிடுவேன்.

  nAradA

Thursday, June 12, 2008

I am not sure if you (nA.kaNNan) are the same who wrote the munnurai on all the AzhwArs. I find a little discrepancy there. It is mentioned that tirumangai mannan wrote 1137 pAsurams and the total of divya prabhandam is 3776. Actually tirumangai mannan wrote 1253 pAsurams and that brings the total of divya prabhandam songs to 3892. tiruvarangattamudanAr wrote a eulogy (108 songs) on Sri Ramanujar which brings the NDP total to 4000.

  நா.கண்ணன்

Thursday, June 12, 2008

தாங்கள் எந்த நூலைச் சுட்டுகிறீர்கள்? என்னை செய்விக்க வைத்தது இந்த 108 கட்டுரைகளைத்தான். இது தவிர உபரியாக நிறையக்கட்டுரைகளும் வைணவ கருதுகோளில் எழுதியுள்ளேன். 4000 பாடல்களுக்கு தாங்கள் தரும் விளக்கம் அழகாக உள்ளது. இக்கட்டுரைகளில் நான் எடுத்தாளும் கணக்கு பேரா.இந்திரா பார்த்தசாரதியின் முனைவர் பட்ட ஆய்வு நூலிலிருந்து எடுத்தது.

  nAradA

Thursday, June 12, 2008

Mr. Kannan:
I am surprised that you replied within minutes of posting my comment. Thank you. I chanced into your blog via adhikAlai.com. Your writings are really superb. I am a Thamizh enthusiast currently living in the USA. I am getting deeply interested in Thamizh literature and religious ones in particular such as panniru tirumurais and divya prabhandham. I have written several articles on nAyanmArs and AzhwArs and divya dEsams.

Coming to the total of divya prabhandams, I literally added the numbers from the pAsurams found in tamilnation.org As for tiurmangai mannan's total the numbers are : 948-1447 (500) 1448-2031 (584)) 2032-2051 (20), 2052-2081 (30) 2672-2790 (119) for a total of 1253

  நா.கண்ணன்

Saturday, June 14, 2008

எப்போதும் உடனே பதிலளிக்க முடிவதில்லை. முடியும் போது உடனே செய்கிறேன்.

உங்கள் திருத்தங்கள்: பச்சைமா மலை..எங்கிருக்கிறது பழைய படி எனத் தெரியவில்லை. எனவே "பெறினும் வேண்டேன்" என்றே மாற்றிவிடுகிறேன்.

பாசுரக் கணக்கு என்பதற்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. மாபெரும் தமிழ்/சமிஸ்கிருத பண்டிதர்கள் நூற்றாண்டுகளாக மெனக்கெட்டு இப்போதுள்ள கணக்கைக் கொடுத்துள்ளார்கள். மேலும் நான் கணக்கில் வீக். எனவே என்னைக் கேட்காதீர்கள் :-)

  nAradA

Sunday, June 15, 2008

By my reckoning here is the count on NDP:
PeriyAzhwAr 473
ANDAL 173
Kulasekara 105
Tirumazhisai 216
Tondaradippodi 55
TiruppANAzhwAr 10
Madurakavi 11
Tirumangai 1253
NammAzhwAr 1296
Poygai 100
BUtham 100
PEy 100
Tiruvarangattamudanar 108
----------------------------
Total 4000
----------------------------
I noticed the correction you made in the pAsuram "paccai mAmalai..."
It appears that the latter day Acharyas wanted a round number dor divya prabhandam (4000); hence they commissioned the ashtotram by tiruvarangattamudanar on Sri Ramanujar and added to the pre-existing total of 3892 pAsurams
to make a round number of 4000 so that they can call it nAlAyira divya prabhandam.

  நா.கண்ணன்

Sunday, June 15, 2008

சரியான கணக்கு! திருவரங்கத்து அமுதனார் எழுத்திக் கொடுத்த 'இராமானுச நூற்றந்தாதியை' மாமுனி ஏற்றுக் கொள்ளவில்லை. 'சுய தம்பட்டம்' எதற்கு? என்று கருதி. பின்னால், அவர் ஆச்சர்யன், ஆழ்வார்கள் பற்றி நிரம்ப எழுதியதால் ஏற்றுக் கொண்டுள்ளார். 120 வயது வாழ்ந்த மனிதர்! சும்மாவே அவரை வணங்கிப் போற்றலாம், அவரது சீல மிகு வாழ்விற்கு. ஆனால் அவர் உலக குரு! எனவே அவர் புகழையும் சேர்த்து 4000 கணக்கு முடிந்து போகிறது.

ஆனால் நாலாயிரம் என்னும் வழக்கு 3000 சொச்சம் (3500 மேலாகிவிட்டால்), ஒரு பொது வழக்கு. அதிலும் தப்பில்லை.

  Kalavai

Tuesday, May 05, 2009

DEAR SIR,

I SEARCHING MANY MONTHS MEANING OF PEYALWAR, AND POODATALWAR. NOW I
UNDERSTAND. THANK U VERY MUCH UR GREAT SEVA. VALARGA UR SEVA . sir my mail id ammapa2000@gmail.com
Keep in touch sir .
Devotional site lists http://srikamalakanniamman.blogspot.com

  Kalavai

Tuesday, May 05, 2009

Dear sir,
i also like ur tamil site. such a great sir. how to tell iam. no words. tamil good.

  நா.கண்ணன்

Tuesday, May 05, 2009

மிக்க நன்றி நண்பரே. ஆழ்வார்கள் பற்றிய புரிதல் இன்னும் அதிகமாக இக்கட்டுரை உதவினால் அது மகிழ்வே!